'தம் லகா கே ஹைசா', 'சாண்ட் கி ஆங்க்', 'சோஞ்சிரியா', 'பதாய் ஹோ' போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்தவர் பூமி பட்னேகர். முன்னணி நடிகையாக திகழும் அவர், தொழில் அதிபராகவும் (இமாலயா குடிநீர் விற்பனை) கலக்கி வருகிறார். இதற்கிடையில் 'வாழ்க்கையில் சில தவறுகளை செய்துவிட்டேன். அதற்காக வருந்துகிறேன்' என்று பூமி பட்னேகர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக அவர் கூறும்போது, "என் வாழ்க்கையில் சில தவறுகளை செய்துள்ளேன். சினிமாவிலும், தொழிலிலும் சில முடிவுகளை சூழ்நிலைக்கேற்ப எடுத்தேன். ஆனால் பின்னர்தான் அது என் நிலையை, ரசிகர்கள் மத்தியில் வேறு மாதிரியாக கொண்டு சென்றுவிட்டது புரிந்தது.
பெரிய 'ஹிட்' படத்தில் நடிக்கும் ஆசைக்காக, நல்ல கதைகளை விட்டுக் கொடுத்தது என அந்த தவறுகளை இனி செய்யக்கூடாது என்ற முடிவுக்கு வந்துள்ளேன். அதேபோல பாலினத்தை கேலி செய்யும், விமர்சிக்கும் மாதிரியான கதைகளிலும் நடிக்க மாட்டேன் என்று உறுதி எடுத்திருக்கிறேன்” என்றார்.