திருவனந்தபுரம்,
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்கள் மோகன்லால் - மம்முட்டி. இருவரும் இப்போது பெரிய நட்சத்திரங்களாக தனித்தனியாக பல ப படங்களில் நடித்துள்ளனர். ஆரம்ப கால கட்டடங்களில் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். சில வருடங்களாக இணைந்து நடிக்காமலிருந்த இந்த இருவரும் மீண்டும் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ` பட்ரியாட் ' படம் மூலம் ஒன்றாக திரையில் தோன்ற உள்ளனர். இந்த படம் வரும் 1 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மம்முட்டி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஸ்டார்டம் என்ற பாரத்தை ஒருபோதும் சுமந்தது இல்லை என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:
ஒரு நடிகர் ஒரே கதாபாத்திரத்தை நூறு முறை செய்ய முடியாது. ஒவ்வொரு முறையும் புதுமை இருக்க வேண்டும். மலையாள சினிமா சர்வதேச அளவில் வளர்ந்து, அதிகமான மக்களை சென்றடைய வேண்டும்என்பது என் விருப்பம். நானும் மோகன்லாலும் எப்பொழுதும் ஸ்டார்டம் என்ற பாரத்தை சுமந்ததில்லை, நாங்கள் சாதாரண மனிதர்களாகவே இருக்கிறோம். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு ரிஸ்க், ஒவ்வொரு படமும் ஒரு ரிஸ்க் தான், ஹிட் படம் எடுக்க எந்த ஒரு நிரந்தரமான பார்முலாவும் இல்லை”:என்று கூறியுள்ளார்.