சினிமா செய்திகள்

'பாலிவுட்டில் நடிக்கும் திட்டம் இல்லை' - நாக சைதன்யா

பாலிவுட்டில் நடிக்கும் திட்டம் தற்போது இல்லை என்று நாக சைதன்யா கூறினார்.

தினத்தந்தி

மும்பை,

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா.  இவர் 2009ம் ஆண்டு வெளியான ஜோஷ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து மனம், ஆட்டோநகர் சூர்யா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

சமீபத்தில் இவர் நடித்த படம் 'கஸ்டடி'. இதனை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கினார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி இதனை தயாரித்தது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவான இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார்.

இவர் பாலிவுட்டில், லால் சிங் சத்தா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் அளித்த பேட்டியில், ஒரு நல்ல படம் எந்த மொழியில் இருந்தாலும் ரசிகர்கள் ஆதரிப்பார்கள். பெரும்பாலான தென்னிந்திய படங்கள் இந்தியில் டப் செய்யப்படுகின்றன. இதனால் பாலிவுட்டில் நடிக்கும் திட்டம் தற்போது இல்லை. நல்ல பாத்திரம் கிடைத்தால் நடிப்பேன், இவ்வாறு கூறினார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்