சினிமா செய்திகள்

"மனதுக்கு பிடித்த மாதிரி வாழ்கிறேன்" - நடிகை சுருதிஹாசன்

நிஜ வாழ்க்கையில் என் மனதுக்கு பிடித்தது போல மட்டும் தான் வாழ்வேன் என்று நடிகை சுருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சுருதிஹாசன் தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் வீரசிம்ஹா ரெட்டி, சிரஞ்சீவியுடன் வால்டேர் வீரையா ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். பிரபாஸ் ஜோடியாக நடிக்கும் சலார் படப்பிடிப்பும் இறுதிகட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் சுருதிஹாசன் அளித்துள்ள பேட்டியில், ''சினிமாவில் எத்தனை உடைகளை மாற்றினாலும், எந்த விதமான உடை அணிந்தாலும், எத்தனை கதாபாத்திரங்களில் நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் என் மனதுக்கு பிடித்தது போல மட்டும் தான் வாழ்வேன். வாழ்க்கையில் மிகவும் கஷ்டமான விஷயம் அடுத்தவர்களுக்கு பிடித்தது போல வாழ்வதுதான். அனைவருக்கும் பிடித்தது போல உடை அணிவது, பேசுவது, நடந்து கொள்வது மிகவும் கஷ்டமான வேலை. ஏனென்றால் அடுத்தவர்கள் நம்மை எப்படி ஆமோதிக்கிறார்கள் என்பது அடிக்கடி மாறிவிடும். அது மிகவும் ஆபத்தானது. அதனால் தான் அனைவரையும் திருப்தி படுத்தவேண்டும் என்று நினைக்காமல், மனதுக்கு சந்தோஷம் எதுவோ அப்படியே இருந்து கொள்வது, நடந்து கொள்வது மிகவும் முக்கியம். நான் எப்பொழுதும் அப்படி வாழ்வதற்குதான் விரும்புவேன்" என்றார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது