சினிமா செய்திகள்

’எனக்கு அது தாமதமாகத்தான் தெரிந்தது...வாழ்நாளில் நான் அப்படி செய்ததே இல்லை’ - ஷர்வானந்த்

ஷர்வானந்த் தற்போது, 'பைக்கர்' என்ற படத்திலும் 'நரி நரி நாடு முராரி' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

தினத்தந்தி

சென்னை,

கடந்த ஆண்டு, ஷர்வானந்த் நடிப்பில் 'மனமே' படம் திரைக்கு வந்தது. தற்போது, அவர் 'பைக்கர்' என்ற படத்திலும் 'நரி நரி நாடு முராரி' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இதனுடன், ஷர்வானந்த் கையில் மேலும் இரண்டு படங்கள் உள்ளன. இதற்கிடையில், சமீபத்தில், ஷர்வானந்த் ஒரு மெல்லிய உடலுடன் காணப்பட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். ஷர்வானந்த் எப்படி இப்படி மாறினார் என்று பலர் இணையத்தில் பேசத்தொடங்கினர்.

இந்நிலையில், இது குறித்து ஷர்வானந்த் சமீபத்தில் விளக்கம் அளித்தார். தனது மகள் பிறந்த பிறகுதான் ஆரோக்கியம் ஒரு பெரிய வரம் என்பதை உணர்ந்ததாக கூறினார் . தனது குடும்பத்திற்காக வலுவாக இருக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்தார்..

அவர் பேசுகையில், 2019-ல் எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில், என் கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொண்டதால் எப்போதும் பசி இருக்கும். அதனால், என் எடை அதிகரித்தது. திடீரென்று 92 கிலோவை எட்டியது. நான் எவ்வளவு மாறிவிட்டேன் என்பதை மிகவும் தாமதமாகதான் உணர்ந்தேன்.

நான் என் வாழ்க்கையில் எந்த உடற்பயிற்சியும் செய்ததில்லை. என் மகள் பிறந்த பிறகுதான் நான் வலுவாக இருக்க முடிவு செய்தேன் என்றார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்