சினிமா செய்திகள்

சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன் ‘‘திருமணம் செய்து கொள்ள மாட்டேன்’’ ஓவியா பேட்டி

‘‘சுதந்திரமாக இருக்க விரும்புவதால், திருமணம் செய்துகொள்ள மாட்டேன். கடைசிவரை நடித்துக் கொண்டிருப்பேன்’’ என்று நடிகை ஓவியா கூறினார்.

தினத்தந்தி

சென்னை,

விமல்-ஓவியா நடித்து சற்குணம் டைரக்ஷனில் தயாராகியிருக்கும் களவாணி2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் ஓவியா கலந்துகொண்டு பேசினார். அவர் கூறியதாவது:

களவாணி, என் மனதுக்கு நெருக்கமான படம். ஹெலன் என்ற என் சொந்த பெயரை மாற்றி, ஓவியா என்று எனக்கு பெயர் சூட்டியவர், டைரக்டர் சற்குணம். இது, களவாணி படத்தின் தொடர்ச்சி அல்ல. வேறு ஒரு புது களத்தில் கதை இருக்கும். முதல் பாகத்தில் நடித்தவர்கள் அத்தனை பேரையும் பார்ப்பதில், சந்தோஷம்.

இந்த படத்தை பொறுத்தவரை, எனக்கும், விமலுக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரியை விட, இளவரசுக்கும், சரண்யா அம்மாவுக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரிதான் சிறப்பாக இருக்கும். விமல், என் நெருங்கிய நண்பர். அவர்தான் எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்தார். களவாணி அளவுக்கு இந்த படமும் ரசிகர்களை திருப்தி செய்யும்.

திருமண வாழ்க்கையில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால் திருமணமே செய்துகொள்ள மாட்டேன். நான் சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன். இந்த வாழ்க்கையே எனக்கு சவுகரியமாக இருக்கிறது. கடைசி வரை நடித்துக் கொண்டிருந்தால் போதும்.

இந்த படத்தில் நான், மகளிர் குழு தலைவியாக நடித்து இருக்கிறேன். எனக்கு சூப்பர் உமன் ஆக நடிக்க ஆசை. அப்படி ஒரு வேடம் கிடைத்தால், மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன். எனக்கு நண்பர்களும் கிடையாது. எதிரிகளும் கிடையாது. எல்லோரிடமும் ஒரே மாதிரி பழகுகிறேன்.

நயன்தாரா, காஜல் அகர்வால், அமலாபால் ஆகிய மூவரும் சொந்த படம் எடுத்து விட்டார்கள். நீங்கள் எடுக்கவில்லையா? என்று கேட்கிறார்கள். நான் இப்போதுதான் வந்து இருக்கிறேன். இன்னும் சம்பாதிக்கவே ஆரம்பிக்கவில்லை. அதனால் சொந்த படம் எடுக்கும் ஆசை இல்லை.

இவ்வாறு ஓவியா கூறினார்.

நிகழ்ச்சியில் டைரக்டர் சற்குணம், நடிகர் இளவரசு, நடிகை சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு