சினிமா செய்திகள்

எல்லோர் முன்னாடியும் அப்படி சொன்னார்...மன வேதனை அடைந்தேன் - பிரபல நடிகை

பெரும்பாலும் ஹிரோயின்கள் உடல் தோற்றம் குறித்த விமர்சனங்களுக்கு ஆளாகிறார்கள்.

தினத்தந்தி

சென்னை,

ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் உடல் தோற்றம் குறித்த விமர்சனங்களுக்கு ஆளாகிறார்கள். பெரும்பாலும் ஹிரோயின்கள் இதுபோன்ற விமர்சனங்களை எதிர்கொள்கிறார்கள்.

இந்நிலையில், பிரபல மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி சமீபத்தில் இந்த விமர்சனங்களுக்கு தானும் ஆளானதாக தெரிவித்தார். சமீபத்திய பேட்டியில் அவர் கூறுகையில்,

''ஒரு முறை விமானநிலையத்தில் திடீரென்று ஒரு மனிதர் என்னிடம் வந்து, "நீ ஏன் இவ்வளவு குண்டாக இருக்கிறாய்?" என்று என் முகத்தைப் பார்த்து கேட்டார். அவர் யார் என்று கூட எனக்குத் தெரியவில்லை.

அவர் எல்லோர் முன்னிலையிலும் அப்படிச் சொன்னபோது, எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் மிகவும் மன வேதனை அடைந்தேன். என்னை பற்றி எப்படி இப்படி சொல்லலாம்? என்று அவரிடம் சண்டை போட்டேன். அது பெரும் தவறு என்று சொன்னேன். அவரும் மன்னிப்பு கேட்டுவிட்டார்.

ஒரு காலத்தில், இதுபோன்ற வார்த்தைகளை என்னால் தாங்க முடியவில்லை... ஆனால் இப்போது நான் மிகவும் வலிமையாகிவிட்டேன். எதிர்மறையான கருத்துகளைப் பற்றி கவலைப்படுவதில்லை'' என்றார்.

8 தோட்டாக்கள்', சர்வம் தாளமயம்', சூரரைப் போற்று', ராயன்' படங்களில் நடித்தவர், அபர்ணா பாலமுரளி. தமிழ் தாண்டி மலையாளத்திலும் முன்னணி நடிகையாக ஜொலித்து வருகிறார். இவர் தற்போது மிராஜ் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 19-ம் தேதி திரைக்கு வருகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு