சினிமா செய்திகள்

'இறந்த பிறகு எனது உடல் உறுப்புகளை தானம் செய்கிறேன்' - நடிகை மகாலட்சுமி

சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிய மகாலட்சுமி உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்து உள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான மகாலட்சுமி சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரின் தோற்றங்களையும் ஒப்பிட்டு சிலர் விமர்சித்தனர்.

அதை பொருட்படுத்தாமல் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களை வலைதளத்தில் வெளியிட்டு வந்தனர். சமீபத்தில் ரவீந்தர் சந்திரசேகர் மோசடி வழக்கில் சிக்கியது பரபரப்பானது.

இந்த நிலையில் தனது பிறந்த நாளை கொண்டாடிய மகாலட்சுமி உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து வலைதளத்தில் மகாலட்சுமி வெளியிட்டுள்ள பதிவில், "எனது பிறந்த நாளில் விலைமதிப்பற்ற பரிசை வழங்க முடிவு செய்து இருக்கிறேன். இறந்த பிறகு எனது உடல் உறுப்புகளை தானம் செய்கிறேன். இதன் மூலம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

நான் இறந்த பிறகும் எனது உறுப்புகள் மற்றவர்கள் வடிவத்தில் வாழும்'' என்று குறிப்பிட்டு உள்ளார். உடல் உறுப்பு தானம் செய்வதாக அறிவித்துள்ள மகாலட்சுமிக்கு பலரும் வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து