சினிமா செய்திகள்

இந்த வருஷம் நான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன் - நடிகர் பிரேம்ஜி

43 வயதாகும் பிரேம்ஜி தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே இருக்கிறார்.

தினத்தந்தி

சென்னை,

பிரபல இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி, சிம்பு இயக்கி, நடித்த வல்லவன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து சென்னை 28 படத்தில் காமெடி ரோலில் நடித்து அசத்தி இருந்தார்.

சென்னை 28 படத்துக்கு பிறகு சத்தம் போடாதே, சந்தோஷ் சுப்ரமணியம், சத்யம், ஒன்பதுல குரு, சேட்டை, நாரதன், சிம்பா என அடுத்தடுத்து பல படங்களில் பிரேம்ஜி அமரன் நடித்தார். மற்ற இயக்குநர்களின் படங்களில் நடித்ததை விட, தனது சகோதரனான வெங்கட் பிரபுவின் சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி படங்கள் பிரேம்ஜிக்கு அதிக பெயரை பெற்றுத்தந்தது.

43 வயதாகும் பிரேம்ஜி தற்பேது வரை திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே இருக்கிறார். கடந்த ஆண்டு, பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கங்கை அமரன் கூறியிருந்தார். ஆனால், பிரேம்ஜியோ இனி கல்யாணமே கிடையாது நான் எப்போதும் முரட்டு சிங்கிள் தான் என்று சேஷியல் மீடியாவில் கூறி வந்தார்.

இந்நிலையில், புத்தாண்டு வாழ்த்துகள், இந்த வருஷம் நான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன் என அவரது எக்ஸ் தள பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது