சென்னை,
தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திரமான பரியா அப்துல்லா, கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ”ஜாதி ரத்னலு” படத்தின் மூலம் அறிமுகமானார். குறுகிய காலத்தில், அங்கீகாரத்தைப் பெற்ற அவர், ராவணசுரா மற்றும் லைக், ஷேர் & சப்ஸ்கிரைப் போன்ற படங்களில் தனித்துவமான நடிப்பால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.
தமிழில் விஜய் ஆண்டனியுடன் வள்ளி மயில் படத்தில் இவர் நடித்திருக்கிறார்.
தற்போது ஜேசன் சஞ்சய் இயக்கி வரும் சிக்மா படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து வரும் பரியா, பெரிய பட்ஜெட் பங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பேன் என்று கூறியுள்ளார். அவர் கூறுகையில்,
"எனது கேரியரில் 100 கோடி வசூல் செய்யும் படங்கள் அல்லது சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை விட, ஆக்கப்பூர்வமான (Creative) கதாபாத்திரங்களுக்குத் தான் நான் முக்கியத்துவம் அளிக்கிறேன். அதிக சம்பளம், கமர்ஷியல் வெற்றி ஒரு பக்கம் இருந்தாலும், தனித்துவமான கதைகளையே நான் தேர்ந்தெடுக்கிறேன்" என்றார்.
இருப்பினும், "100 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் செய்வீர்களா?" என்ற கேள்விக்கு, "கிடைத்தால் ஏன் செய்யமாட்டேன்? கண்டிப்பாகச் செய்வேன்" எனச் சிரித்துக் கொண்டே பதிலளித்துள்ளார்.