சினிமா செய்திகள்

மகேஷ் பாபு - ஜூனியர் என்.டி.ஆருக்காக இரவும் பகலும் வேலை பார்க்க தயார் - பிரபல நடிகை

திரைத்துறையில் தொடர் வெற்றிகளை பெற்று வரும் இவர், தற்போது 'தெலுசு கடா' என்ற படத்தில் நடித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

கேஜிஎப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ஸ்ரீநிதி ஷெட்டி, தனது முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றார். சமீபத்தில் நானியுடம் ஹிட் 3 படத்தின் மூலம் மற்றொரு வெற்றியைப் பெற்றார்.

திரைத்துறையில் தொடர் வெற்றிகளை பெற்று வரும் ஸ்ரீநிதி ஷெட்டி, தற்போது 'தெலுசு கடா' என்ற படத்தில் நடித்துள்ளார். சித்து ஜோன்னலகடா கதாநாயகனாக நடித்த இந்தப் படம் வருகிற 17 ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்போது படத்தின் புரமோஷன் பணிகளில் ஸ்ரீநிதி ஷெட்டி தீவிரமாக பங்கேற்று வருகிறார்.

அப்போது ஒரு நேர்காணலில் ஸ்ரீநிதியிடம் ஒரு சுவாரசியமான கேள்வி கேட்கப்பட்டது. மகேஷ் பாபு மற்றும் ஜூனியர் என்.டி.ஆருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் யாருடன் நடிப்பீர்கள் என்று கேட்டபோது, "நான் ஏன் அந்த வாய்ப்புகளை நிராகரிக்க வேண்டும்?" என்று பதிலளித்தார். இரண்டு படங்களுக்கும் தேதிகளை ஒதுக்கி இரவும் பகலும் வேலை பார்ப்பேன் என்று கூறினார். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து