பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் கபடதாரி படத்தை லலிதா தனஞ்செயன் தயாரிக்கிறார். கதைநாயகனாக சிபிராஜ் நடிக்க, அவருக்கு ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடிக்கிறார். பூஜாகுமார், நாசர், ஜெயப்பிரகாஷ், ஜே.சதீஷ்குமார், தீனா ஆகியோரும் நடிக்கிறார்கள். எம்.ஹேமந்த்ராவ் எழுதிய கதைக்கு திரைக்கதை-வசனத்தை ஜான் மகேந்திரன், ஜி.தனஞ்செயன் ஆகிய இருவரும் எழுதியிருக்கிறார்கள். சைமன் கே.கிங் இசையமைக்கிறார்.
கடந்த 1-ந் தேதி தொடங்கிய படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடைபெற்று 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நடைபெற இருக்கிறது.