எப்போதும் பரபரப்பை ஏற்படுத்தும் அமலாபால், ஆடை படத்துக்குப்பின் சில ஆண்டுகள் அமைதியாக இருந்தார். மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அவர் ஒரு தெலுங்கு வெப் தொடரில் நடித்து இருக்கிறார்.
இது திடுக்கிடும் திருப்பங்களை கொண்ட திகில் தொடர்.
யு டர்ன் கன்னட படம் மூலம் பிரபலமான பவன் குமார் டைரக்டு செய்து இருக்கிறார். இதில் முதன்மை கதாபாத்திரத்தில் அமலாபால் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராகுல் விஜய் நடித்து இருக்கிறார்.
தெலுங்கு ரசிகர்கள் இதுவரை பார்த்திராத திகில் தொடர், இது. ஒரு போலீஸ் அதிகாரிக்கும், டெலிவரி பையனுக்கும் இடையே நடைபெறும் கதை என்று டைரக்டர் பவன்குமார் கூறுகிறார்.