இந்தி, தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் கொரோனா காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிகள் செய்து இந்தியா முழுவதும் கவனம் பெற்றார். தெலுங்கானாவில் ரசிகர்கள் அவருக்கு கோவில் கட்டி சிலையும் வைத்துள்ளனர். ஐதராபாத்தில் ஒரு ரசிகர் சோனு சூட் பெயரில் சாலையோரத்தில் ஓட்டல் தொடங்கி உள்ளார்.
இதுபற்றிய தகவல் சமூக வலைத்தளத்தில் பரவியது. இதனை பார்த்த சோனுசூட் அந்த ஓட்டலுக்கு திடீரென்று சென்றார். அவரை பார்த்த ரசிகர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார். சோனுசூட் வந்த தகவல் அறிந்து ஓட்டல் முன்னால் ரசிகர்கள் திரண்டனர். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் சோனுசூட் வெளியிட்டுள்ள பதிவில், எனது பெயரில் ரசிகர் ஓட்டல் நடத்துவதை பார்த்து வியந்தேன். அந்த ஓட்டலில் சாப்பிட விரும்பி சென்றேன். பிரைட் ரைஸ், கோபிமஞ்சூரியன் சாப்பிட்டேன் என்று கூறியுள்ளார்.