சினிமா செய்திகள்

நீயா 2-ம் பாகம் படத்தில் பாம்பாக நடித்த 3 கதாநாயகிகள்

கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா நடித்து 1979-ல் திரைக்கு வந்த நீயா படத்தின் இரண்டாம் பாகமாக இதை எடுத்துள்ளனர்.

பேய் படங்கள் சீசனாக உள்ள தமிழ் பட உலகில் புதிதாக நீயா-2 என்ற பாம்பு படம் தயாராகி உள்ளது. கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா நடித்து 1979-ல் திரைக்கு வந்த நீயா படத்தின் இரண்டாம் பாகமாக இதை எடுத்துள்ளனர். இந்த படத்தை சுரேஷ் டைரக்டு செய்துள்ளார். ஏ.ஸ்ரீதர் தயாரித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராகிறது.

படம் குறித்து டைரக்டர் சுரேஷ் கூறிய தாவது:-

காதலனை அடைய போராடும் 3 பெண்கள் பற்றிய கதையே நீயா-2. இந்த படத்தின் திரைக்கதை 1990 காலகட்டத்திலும் இப்போதும் நடப்பதுபோல் இருக்கும். ஜெய் கதாநாயகனாகவும் ராய்லட்சுமி, கேத்தரின் தெரசா, வரலட்சுமி ஆகியோர் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். இந்த மூன்று கதாநாயகிகளும் பாம்பாக மாறும் காட்சிகளும் படத்தில் இருக்கும்.

நீயா படத்தில் இடம்பெற்ற ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா பாடலை வரலட்சுமி பாடி நடிக்க படத்தில் சேர்த்துள்ளோம். ஜெய்யும், ராய்லட்சுமியும் இருவேடங்களில் நடித்துள்ளனர். பழிவாங்கும் காட்சிகள் இல்லாமல் பாம்பு கதையை படமாக்கி உள்ளோம். இந்த படத்தில் கருநாகம் முக்கிய கதாபாத்திரமாக இருக்கும்.

பாம்பை கிராபிக்ஸ் காட்சியில் உருவாக்கி உள்ளோம். பாம்பின் சாகச காட்சிகள் மிரட்டலாக வந்துள்ளது. நீயா படத்துக்கும் இந்த படத்துக்கும் 3 தொடர்புகள் இருக்கும். இவ்வாறு வெங்கடேஷ் கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...