சினிமா செய்திகள்

‘பிகில்’ படத்தில் விஜய் பாடல்

தெறி, மெர்சல் படங்களுக்கு பிறகு மீண்டும் அட்லி இயக்கும் பிகில் படத்தில் விஜய் நடிக்கிறார்.

தினத்தந்தி

இதில் நயன்தாரா ஜோடியாக வருகிறார். ஜாக்கி ஷெராப், விவேக், டேனியல் பாலாஜி, கதிர், யோகிபாபு, ரெபா மோனிகா ஆகியோரும் உள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதில் விஜய் தந்தை, மகன் என்று இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.

மகன் விஜய் மைக்கேல் என்ற பெயரில் பெண்கள் கால்பந்து பயிற்சியாளராக வருகிறார். படத்தின் முதல் தோற்றம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர். விஜய் ஏற்கனவே சச்சின், காதலுக்கு மரியாதை, துப்பாக்கி, புலி, தலைவா, ஜில்லா உள்ளிட்ட பல படங்களில் 32 பாடல்களை சொந்த குரலில் பாடி இருக்கிறார்.

2017-ல் வெளியான பைரவா படத்தில் கடைசியாக பாடினார். அதன்பிறகு வெளியான மெர்சல், சர்கார் படங்களில் பாடவில்லை. இந்த நிலையில் ரசிகர்களுக்கு இன்ப செய்தியாக பிகில் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய் ஒரு பாடலை பாடி இருக்கிறார். பாடல் வரிகளை விவேக் எழுதி உள்ளார்.

இந்த பாடல் ரசிகர்களுக்கு வெறித்தனமாக இருக்கும் என்று படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா உறுதிப்படுத்தி உள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய் பாடிய முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு