சினிமா செய்திகள்

முதன்முதலாக தெலுங்கு படத்தில், அப்புக்குட்டி!

முதன்முதலாக தெலுங்கு படத்தில், நடிகர் அப்புக்குட்டி நடிக்க உள்ளார்.

தினத்தந்தி

தூத்துக்குடி மாவட்டம் பூச்சிக்காடு கிராமத்தை சேர்ந்தவர், அப்புக்குட்டி. நகைச்சுவை நடிகராக, குணச்சித்ர நடிகராக, கதைநாயகனாக என பல படங்களில் நடித்து வந்த அவர், முதன்முதலாக ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கிறார். அவர் கூறியதாவது:

தெலுங்கு பட உலகுக்கு நகைச்சுவை நடிகராக அறிமுகமாகிறேன். நான் நடித்த வாழ்க விவசாயி படம் வெளிவர வேண்டியிருக்கிறது. அந்த படம் எப்போது வெளியானாலும் கொண்டாடப்படும். படம் வெளியாகும் நாளுக்காக காத்திருக்கிறேன். இதையடுத்து வெட்டிப்பசங்க, பரமகுரு, வல்லவனுக்கு வல்லவன், பூம்பூம் காளை, வைரி, ரூட்டு, இந்த ஊருக்கு என்னதான் ஆச்சு போன்ற படங்களில் நடித்து வருகிறேன். சோதனையான கொரோனா காலகட்டத்தை கடந்து விட்டால், திரையுலகில் சுபிட்சம் ஏற்படும். நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என்கிறார், அப்புக்குட்டி!

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை