சினிமா செய்திகள்

முக்கிய வேடத்தில் நடிக்கிறார் ‘கபடதாரி’ படத்தில், பூஜா குமார்

சிபிராஜ் நடிக்கும் ஒரு புதிய படத்துக்கு, ‘கபடதாரி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இந்த ‘டைட்டில்,’ ரசிகர்-ரசிகைகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.

கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், விஸ்வரூபம் பட புகழ் பூஜாகுமார், இந்த படத்தில் இணைய இருக்கிறார். அவர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இதுபற்றி படத்தின் கிரியேடிவ் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் கூறியதாவது:-

கபடதாரி படத்தில் பூஜாகுமார் இணைந்திருப்பது, படத்துக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. இந்த கதாபாத்திரம் கதையை ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு உயர்த்துவதுடன், பல திருப்பங்களையும், ஆச்சரியங்களையும் ஏற்படுத்தும்.

பூஜாகுமார் விஸ்வரூபம், உத்தம வில்லன் மற்றும் ஆங்கில படங்களில் நடித்து இருப்பவர். அவருடன் பணியாற்றுவதற்கு ஆர்வத்துடன் காத்திருக்கிறோம். படத்தில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா கதையின் நாயகன்- நாயகியாக நடிக்க, நாசர், ஜெயப்பிரகாஷ், ஜே.எஸ்.கே. ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி டைரக்டு செய்கிறார். படப் பிடிப்பு இம்மாதம் தொடங்க இருக்கிறது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு