சினிமா செய்திகள்

பாதுகாப்பு கோரி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தொடர்ந்த வழக்கில் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

பாதுகாப்பு கோரி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தொடர்ந்த வழக்கில் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

தினத்தந்தி

சென்னை

தர்பார் படம் நஷ்டம் தொடர்பாக விநியோகஸ்தர்கள் மிரட்டுவதாக, பாதுகாப்பு கேட்டு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தர்பார் பட விநியோகத்தில் நஷ்டம் அடைந்ததாகவும், இழப்பீடு கோரியும் தினமும் 30 முதல் 40 வினியோகஸ்தர்கள் மிரட்டும் வகையில் செயல்படுவதாகவும்.

அதனால் தனக்கு தனிப்பட்ட முறையிலும், தனது வீடு மற்றும் அலுவலகத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிடவும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி ராஜமாணிக்கம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

முருகதாஸ் கோரிக்கை மனு மீது எடுத்த நடவடிக்கை என்ன? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியது.

இந்த மனுக்கள் மீது பிப்ரவரி 10ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்