சினிமா செய்திகள்

'இந்தியன்-2' திரைப்படத்தின் 2வது பாடலான 'நீலோற்பம்' நாளை காலை வெளியாகும் - படக்குழு அறிவிப்பு

‘இந்தியன் 2' படத்தின் இரண்டாவது பாடலான ‘நீலோற்பம்’ நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான 'இந்தியன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. தற்போது இதன் இரண்டாம் பாகத்தை 28 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் சங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த திரைப்படம், பின்னர் ஒரு சில காரணங்களால் தாமதமானது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. ஜூன் 1-ம்தேதி இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இதில் ரஜினிகாந்த், ராம்சரண், இயக்குனர் மணிரத்னம், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, இந்தி நடிகர் ரன்வீர் சிங், மலையாள நடிகர் மோகன் லால் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, 'இந்தியன் 2' படத்தின் இரண்டாவது பாடலான 'நீலோற்பம்' நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடலின் ப்ரோமோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் 2' திரைப்படம் வருகிற ஜூலை 12-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை