சினிமா செய்திகள்

'தேவரா' படத்தின் டிரெய்லர் ரிலீஸ் குறித்த தகவல்

'தேவரா' படம் வருகிற 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் 30-வது படத்தை இயக்குனர் கொரட்டலா சிவா இயக்குகிறார். இப்படத்துக்கு 'தேவரா பாகம்-1' என்று பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் சாயிப் அலிகான், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் மிக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் படத்தின் இறுதி கட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில், இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படம் வருகிற 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் டிரெய்லர் வருகிற 10-ந் தேதி வெளியாக உள்ளது. நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இது குறித்த பதிவை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு