சினிமா செய்திகள்

தியேட்டர்களுக்கு பதிலாக இணைய தளத்தில் ரிலீசாகும் மேலும் 3 படங்கள்

தியேட்டர்களுக்கு பதிலாக இணைய தளத்தில் ரிலீசாகும் மேலும் 3 படங்கள். இது தியேட்டர் தொழிலை பாதிக்கும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்த்து வருகிறார்கள்.

தினத்தந்தி

கொரோனா ஊரடங்கினால் திரையரங்குகள் 70 நாட்களுக்கு மேலாக மூடிக்கிடக்கின்றன. இதனால் புதிய படங்கள் இணைய தளத்தில் வெளியாகின்றன. இது தியேட்டர் தொழிலை பாதிக்கும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்த்து வருகிறார்கள். ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஏற்கனவே ஓடிடி தளத்தில் வெளியானது. கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் வருகிற 19-ந்தேதி இணைய தளத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

கலையரசனின் டைட்டானிக் காதலும் கவுந்து போகும், அந்தகாரம் ஆகிய படங்களும் இணைய தளத்தில் வெளியாகலாம் என்று தெரிகிறது. விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ரண சிங்கம் படத்தையும் இணைய தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.

இந்த நிலையில் வா டீல், மம்மி சேவ், அண்டாவ காணோம் ஆகிய மேலும் 3 படங்கள் இணைய தளத்தில் வெளியாகிறது. இதுகுறித்து தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ் குமார் தனது டுவிட்டர் பதிவில், ஜே.எஸ்.கே. பிலிம்சின் அண்டாவ காணோம், வா டீல், மம்மி சேவ் ஆகிய 3 படங்களும் விரைவில் இணைய தளத்தில் வெளியாக உள்ளன என்று தெரிவித்து உள்ளார். வா டீல் படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். அண்டாவ காணோம் படத்தில் ஸ்ரேயா ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு