சினிமா செய்திகள்

இந்தியன்-2 விபத்து எதிரொலி: ‘மாநாடு’ படத்தில் நடிக்கும் சிம்பு, பாரதிராஜா, கல்யாணிக்கு காப்பீடு

மாநாடு படத்தில் நடிக்கும் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா உள்ளிட்ட உள்ளிட்ட அனைவருக்கும் படத்தின் தயாரிப்பாளர் இன்சூரன்ஸ் செய்துள்ளார்.

தினத்தந்தி

இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் சரிந்து 3 பேர் பலியான சம்பவம் திரையுலகை உலுக்கியது. இந்த விபத்தில் 9 பேர் காயம் அடைந்தனர். கமல்ஹாசன், காஜல் அகர்வால், இயக்குனர் ஷங்கர் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இந்தியன்-2 விபத்தை தொடர்ந்து மற்ற நடிகர்களின் படப்பிடிப்புகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

படப்பிடிப்புக்காக போடப்பட்டுள்ள அரங்குகளின் வலிமை சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது. படப்பிடிப்புக்கு அருகிலேயே தீயணைப்பு கருவிகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வைக்கப்படுகின்றன. நடிகர்கள் கயிற்றில் தொங்கி சண்டை போடும் காட்சிகளையும் பாதுகாப்பாக எடுக்கிறார்கள்.

இந்த நிலையில் மாநாடு படத்தில் நடிக்கும் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட நடிகர்- நடிகை களையும் கேமராமேன், இயக்குனர், உதவி இயக்குனர்கள் உள்ளிட்ட தொழில் நுட்ப கலைஞர்களையும் ரூ.30 கோடிக்கு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இன்சூரன்ஸ் செய்துள்ளார்.

இதற்கான காப்பீட்டு பிரிமியம் தொகையாக ஜி.எஸ்.டி. வரி சேர்த்து ரூ.7.8 லட்சம் செலுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. மாநாடு படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. வி.ஜி.பி. தங்க கடற்கரையிலும் முக்கிய காட்சிகளை படமாக்க அரங்குகள் அமைத்து உள்ளனர். படத்தை ஆகஸ்டு மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்