சினிமா செய்திகள்

நயன்தாரா படத்துக்கு மீண்டும் சர்வதேச விருது

நடிகை நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கிய கூழாங்கல் என்ற படத்தை தயாரித்துள்ளார்.

தினத்தந்தி

குடிகார தந்தைக்கும், மகனுக்குமான உறவு பற்றிய கதை. கூழாங்கல் தலைப்பை போல் மிக எளிமையாக இருந்தாலும் அது எங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது. இத்திரைப்படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கொண்டு செல்வது என முடிவு செய்துள்ளோம் என்று நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து கூழாங்கல் படம் நெதர்லாந்தில் உள்ள ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் திரையிடப்பட்டு சிறந்த படத்துக்கான விருதை பெற்றது.

ரோட்டர்டாம் சர்வதேச விழாவில் விருது பெற்ற முதல் தமிழ் படம் கூழாங்கல். இதையடுத்து நியூயார்க்கில் நடந்த டைரக்டர்ஸ் நியூ திரைப்பட விழாவுக்கும் அனுப்பப்பட்டது. அங்கு கூழாங்கல் படம் திரையிடப்பட்டு சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றுள்ளது. இதற்காக நயன்தாரா உள்ளிட்ட கூழாங்கல் படக்குழுவினருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை