சினிமா செய்திகள்

பாலியல் தொழிலாளி என்பதா? இந்தி நடிகை ஷரின் போலீசில் புகார்

தமிழில் நகுல் நடித்த ‘நான் ராஜாவாகப் போகிறேன்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவர் ஷரின். இந்தி நடிகையான இவர் வீர், ரெடி, ஹேட் ஸ்டோரி-3 உள்பட பல படங்களில் நடித்துள்ளார். ஹிருத்திக் ரோஷன், கங்கனா ரணாவத் ஆகியோருக்கு மானேஜராக இருந்த அஞ்சலி அதா என்ற பெண்ணை தனக்கும் மானேஜராக வைத்துக்கொண்டார்.

தினத்தந்தி

4 மாதங்கள் பணியாற்றிய நிலையில் ஷரினுக்கும் அஞ்சலி அதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவரை நீக்கி விட்டு வேறு ஒருவரை ஷரின் மானேஜராக வைத்துக்கொண்டார். அதன்பிறகும் ஷரின், அஞ்சலி அதா இடையே பண விவகாரம் தொடர்பாக மோதல் ஏற்பட்டது.

வாட்ஸ் அப்பில் ஷரினை பாலியல் தொழிலாளி என்ற ரீதியில் அஞ்சலி திட்டி குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நடிகை ஷரின் மும்பையில் உள்ள கர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அஞ்சலி அதா தன்னை பாலியல் தொழிலாளி என்று அவதூறாக பேசி புகழை கெடுக்க முயற்சி செய்கிறார் என்று மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள். ஷரின் வக்கீல் ரிஸ்வான் சித்திக் கூறும்போது, ஷரின் பெயரை சொல்லி பணம் வாங்கி அஞ்சலி அதா மோசடி செய்துள்ளார். இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு