சினிமா செய்திகள்

நடிகை ரோஜா மகள் கதாநாயகி ஆகிறாரா?

உங்கள் மகள் கதாநாயகி ஆகிறாரா? என்ற கேள்விக்கு, அது மகளின் விருப்பத்தை பொறுத்தது என்று நடிகை ரோஜா பதில் அளித்து உள்ளார்.

தினத்தந்தி

திரையுலகில் வாரிசுகள் பலர் கதாநாயகிகளாகி உள்ளனர். கமல்ஹாசன் மகள்கள் சுருதிஹாசன், அக்ஷராஹாசன், ராதாவின் மகள் கார்த்திகா, துளசி, லிசியின் மகள் கல்யாணி பிரியதர்ஷன், அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன், இந்தியில் சோனம்கபூர், அலியாபட், சாரா அலிஹான், சோனாக்சி சின்ஹா, ஜான்வி கபூர் உள்ளிட்ட பலர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்த நிலையில் நடிகை ரோஜாவின் மகள் அஞ்சுமாலிகாவும் கதாநாயகியாக களம் இறங்கப்போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. ரோஜா தமிழ் பட உலகில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். பின்னர் இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். தற்போது நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு மகள் அஞ்சுமாலிகாவின் 17-வது பிறந்தநாளை ரோஜா கொண்டாடினார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி ரசிகர்கள் பலரும் அஞ்சுமாலிகா வளர்ந்து விட்டார். சினிமாவில் நடிக்கிறாரா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். இயக்குனர்கள் சிலரும் தங்கள் படங்களில் அஞ்சுமாலிகாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ரோஜாவிடம் அஞ்சுமாலிகா சினிமாவில் நடிப்பாரா? என்று கேள்வி எழுப்பியபோது அது மகளின் விருப்பத்தை பொறுத்தது. நான் எதையும் திணிக்க மாட்டேன் என்று பதில் அளித்து இருந்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்