சினிமா செய்திகள்

கள்ளக்காதலை படமாக்கியதாக எனது குறும்படத்தை எதிர்ப்பதா? - டைரக்டர் கவுதம் மேனன்

கள்ளக்காதலை படமாக்கியதாக கூறி, சிலர் எனது குறும்படத்தை எதிர்க்கிறார்கள் என்று டைரக்டர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

கொரோனா ஊரடங்கில் கவுதம் மேனன் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். இதில் சிம்புவும் திரிஷாவும் வீட்டில் இருந்தே நடித்துள்ளனர். 2010ல் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தின் ஒரு பகுதியாக இந்த குறும்படம் தயாராகி உள்ளது. குறும்படத்தில் திருமணமாகி குழந்தைகளுடன் இருக்கும் தனது பழைய காதலி திரிஷாவிடம் போனில் பேசும் சிம்பு இப்போதும் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்வதுபோன்ற வசனம் உள்ளது. இதற்கு சமூக வலைத்தளத்தில் எதிர்ப்பு கிளம்பியது. கள்ளக்காதலை ஊக்குவிப்பதுபோல் குறும்படத்தை எடுத்து இருப்பதாகவும் இளைஞர்கள் மனதில் விஷத்தை கலக்க வேண்டாம் என்றும் கவுதம் மேனனை பலரும் கண்டித்தனர். இந்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்து கவுதம் மேனன் கூறியிருப்பதாவது:

நீங்களும் உங்கள் முன்னாள் காதலியை அழைத்து பேசுங்கள் என்று சொல்வதற்காக இந்த படத்தை நான் எடுக்கவில்லை. இது ஜெஸ்ஸி, கார்த்திக்கின் கதை. நான் எழுதிக்கொண்டிருக்கும் திரைக்கதையில் உள்ள ஒரு காட்சிதான் இது. பார்ப்பவர்களுக்கு அது கள்ளக்காதல் போன்று இருந்தாலும் எனக்கு அப்படி தோன்றவில்லை. எப்போதுமே எனது படங்களுக்கு பிடித்தவர்களும் பிடிக்காதவர்களும் சுமாரான படம் என்று கூறியவர்களும் இருந்து இருக்கிறார்கள். விமர்சனங்களை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன். ஒரு சிலர்தான் படத்தை வசைபாடுகின்றனர். என்று கவுதம் மேனன் கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு