சினிமா செய்திகள்

'எஸ்டிஆர் 51' படத்தின் கதாநாயகி இவரா?

இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ள இப்படத்திற்கு 'காட் ஆப் லவ்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். வடசென்னையை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டு வருகின்றன.

இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் சிம்பு 'ஓ மை கடவுளே', 'டிராகன்' போன்ற படங்களை இயக்கி உள்ள இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார். சிம்புவின் 51வது படமான இப்படத்திற்கு 'காட் ஆப் லவ்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்க உள்ள இந்த படம் பிரமாண்டமாக உருவாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, பிரபல பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் இப்படத்தில் நாயகி நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு

அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி

மலையேற்றத்தின்போது இளைஞர் உயிரிழப்பு: எஜமானரின் உடலை 3 நாட்கள் பாதுகாத்த செல்லப்பிராணி நாய்