சினிமா செய்திகள்

'அரசன்' படத்திற்காக உடல் எடையை குறைக்கும் சிம்பு?

இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சென்னை,

`அரசன்' படத்தின் அடுத்தகட்டக் காட்சிகளுக்காக நடிகர் சிம்பு துபாயில் தனது உடல் எடையைக் குறைக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

'அரசன்'

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் (எஸ்டிஆர்) நடித்து வரும் 'அரசன்' திரைப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஆண்ட்ரியா ஜெரெமையா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரகனி, விக்ராந்த், கிஷோர், அமீர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக தெரிகிறது.

எடையைக் குறைக்கும் சிம்பு

தீபாவளி வெளியீட்டை இலக்காகக் கொண்டு படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், `அரசன்' படத்தின் , அடுத்தகட்டக் காட்சிகளுக்காக நடிகர் சிம்பு துபாயில் தனது உடல் எடையைக் குறைக்கும் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.