சினிமா செய்திகள்

விரைவில் விண்வெளியில் இளையராஜாவின் இசை...!!

உலகின் எடைக்குறைவான சாட்டிலைட்டில் இளையராஜாவின் பாடல் இடம்பெற இருக்கிறது.

தினத்தந்தி

சென்னை,

உலகத்திலேயே எடை குறைவான சாட்டிலைட் தயாரிக்கும் தமிழகத்தை சேர்ந்த ஒரு மாணவர்கள் குழு இந்த ஆண்டு இன்னும் அதிக எடையை குறைத்து ஒரு புதிய சாட்டிலைட்டை வடிவமைத்துள்ளது.

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்ரோ உதவியுடன் இளையராஜா இசையமைத்துள்ள பாடல் இடம்பெற்றுள்ள சாட்டிலைட்டை விண்வெளிக்கு அனுப்ப இந்த மாணவர்கள் குழு முடிவு செய்துள்ளது.

இதன்படி தமிழக மாணவர்கள் தயாரித்து வரும் சாட்டிலைட் வரும் ஆக.15ஆம் தேதி இஸ்ரோ உதவியுடன் விண்ணிற்கு ஏவப்படுகிறது.

கடந்த 75 ஆண்டுகள் நிகழ்ந்த இந்தியாவின் புதுமைகளையும், இனிவரும் காலங்களில் இந்த பாரதம் நம்பர் ஒன் தேசமாக இருக்கும் என்பதையும் உள்ளடக்கிய பாடலை இளையராஜா இசையமைத்துள்ளார். பாடலை சுவானந்த் கிர்கிரே எழுத, இளையராஜா பாடி இசையமைத்துள்ளார்.

இதன்மூலம் விரைவில் விண்வெளியில் இளையராஜாவின் இசை ஒலிக்க இருக்கிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை