நடிகர் சூர்யாவின் 45-வது படம் கருப்பு. இந்தப் படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும் நட்டி, இந்திரன்ஸ், சுவாசிகா, யோகி பாபு உள்ளிட்டோரும் கருப்பு படத்தில் இடம் பெற்றுள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்திருக்கும் கருப்பு படம் கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முதல்முறையாக அறிவிக்கப்பட்டது. சூர்யா வழக்கறிஞராக நடித்திருப்பதால் கதை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆனால் இந்த படம் ரிலீஸ் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. படத்தின் ஓடிடி உரிமை விற்கப்படாமல் இருப்பதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதற்கிடையே, நேற்று இந்தியா-நியூசிலாந்து இடையேயான டி20 ஓவர் உலகக் கோப்பை பைனல் போட்டியில், கருப்பு படத்தின் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி வர்ணனையாளராக பங்கேற்றிருந்தார். அவர் போட்டியின் நடுவே கருப்பு படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஆர்.ஜே. பாலாஜி கூறுகையில், “ரச்சின் ரவீந்திராவையே ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி ரிலீஸ் செய்து விட்டது. ஆனால் நான் எடுத்த படம் எப்போது வெளியாகும் என்று தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.