Image Courtesy: @thondankani / @sooriofficial  
சினிமா செய்திகள்

சூரி நடிக்கும் 'கருடன்' திரைப்படம் மார்ச் இறுதியில் வெளியாகவுள்ளதாக தகவல்..!

இந்தப்படத்தில் சசிக்குமார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

விடுதலை, கொட்டுகாளி திரைப்படத்தை தொடர்ந்து சூரி கதாநாயகனாக நடிக்கும் படம் கருடன். இந்தப்படத்தில் சசிக்குமார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகர் உன்னி முகுந்தன் வில்லனாக நடித்துள்ளார்.

இப்படம் வெற்றிமாறன் கதையில், எதிர்நீச்சல் புகழ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வருகிறது. கும்பகோணம் தேனி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுவந்த நிலையில் தற்போது கருடன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படம் வரும் மார்ச் மாதம் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது