சினிமா செய்திகள்

'விஜய்யுடன் நடிப்பது என் கனவு' - ராஷி கன்னா

ராசி கன்னா அளித்துள்ள பேட்டி ஒன்றில் எப்படியாவது விஜயுடன் இணைந்து நடிக்க வேண்டும். அது என்னுடைய கனவு. நிச்சயம் நீண்ட நாள் கனவு விரைவில் நிறைவேறும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

தென் இந்தியாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் விஜய். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

விஜய்யுடன் நடிக்க கதாநாயகிகள் எப்போதுமே ஆர்வம் காட்டி வருகிறார்கள். விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்று ராஷ்மிகா மந்தனா செல்லும் இடமெல்லாம் கூறி வந்தார். அதேபோல கிரித்தி ஷெட்டியும் தனது விருப்பத்தை தெரிவித்து வந்தார். தற்போது ராஷி கன்னாவும் அந்த பட்டியலில் இணைந்து இருக்கிறார்.

ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், "விஜய்யுடன் இணைந்து நடிப்பது என் கனவு. அந்த கனவு நிச்சயம் நடக்க வேண்டும். அந்த நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். என் கனவு பலிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று பேசினார்.

விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்ற ராஷ்மிகாவின் ஆசை, வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் 'வாரிசு' படம் மூலம் நிறைவேறி இருக்கிறது. தனது ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் ராஷ்மிகா உற்சாகமாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

ராஷ்மிகா போல தங்கள் ஆசையும் நிறைவேற வேண்டும், விஜய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று கிரித்தி ஷெட்டி, ராஷி கன்னா ஆகியோர் வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து