சினிமா செய்திகள்

'கேப்டன் மில்லர்' படத்தில் தனுசுடன் இணைந்து நடிக்கிறார் சந்தீப் கிஷான்..!

'கேப்டன் மில்லர்' படத்தில் நடிகர் சந்தீப் கிஷான், நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் 'நானே வருவேன்'. இந்த திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 'நானே வருவேன்' திரைப்படம் இந்த மாதம் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ள படம் 'கேப்டன் மில்லர்'. சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தின் பிரீ புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. 'கேப்டன் மில்லர்' படத்தின் படப்பிடிப்பில் நடிகர் தனுஷ் விரைவில் கலந்துகொள்ளவுள்ள நிலையில் இந்த படத்தில் 'மாநகரம்' படத்தின் மூலம் பிரபலமான சந்தீப் கிஷான், நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. புதிய போஸ்டர் ஒன்றை பகிர்ந்து படக்குழு இதை அறிவித்துள்ளது. 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்