சினிமா செய்திகள்

பயண தடையை விலக்கக்கோரி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மனு

தன் மீதான பயணத்தடையை விலக்கக் கோரி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தினத்தந்தி

டெல்லியை சேர்ந்த ஒரு தொழிலதிபர் மனைவியிடம் ரூ.215 காடி ஏமாற்றி வாங்கியதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கடந்த ஆண்டு கைது சய்யப்பட்டார். அவருடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசையும் இவ்வழக்கில் அமலாக்கத்துறை விசாரித்தது.

அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது. அவரது ரூ.7 கோடி சொத்துகள் முடக்கப்பட்டன.

இந்தநிலையில், ஒரு விருது விழாவுக்காக அபுதாபி செல்ல வேண்டி இருப்பதால், 15 நாட்களுக்கு பயண தடையை தற்காலிகமாக விலக்கக்கோரி, டெல்லி கோர்ட்டில் நடிகை ஜாக்குலின் மனு தாக்கல் செய்துள்ளார்.

நேற்று அம்மனு நீதிபதி பிரவீன் சிங் முன்பு விசாரணைக்கு வந்தது. ஜாக்குலின் சார்பில் ஆஜரான வக்கீல், கோர்ட்டு எந்த நிபந்தனை விதித்தாலும் ஏற்கத்தயார் என்று உறுதி அளித்தார். இதையடுத்து, ஜாக்குலின் மனுவுக்கு பதில் அளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 18-ந் ததிக்கு தள்ளிவைத்தார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை