சினிமா செய்திகள்

ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 28ம் தேதி நடைபெறும்...!

ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 28ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் காவாலா, 'இது டைகரின் கட்டளை' பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 28ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்