சினிமா செய்திகள்

வெளியானது ஜெயிலர் திரைப்படம்: திரையரங்குகளில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் வெளியானது.

தினத்தந்தி

சென்னை,

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி நடித்துள்ள 'ஜெயிலர்' திரைப்படம் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் முதல் நாள் முதல் காட்சி ( FDFS) 9 மணிக்கு வெளியானது. இதனை ஆட்டம் பாட்டத்துடன், மேள, தாளங்களுடன் பட்டாசு வெடித்து ரஜினி ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

சென்னை, மதுரை, கோயம்புத்தூர், வேலூர், சேலம் மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளிலும் ஜெயிலர் படம் வெளியாகியுள்ளது. மதுரையில் சிறைக்கைதிகள் வேடம் அணிந்து ஜெயிலர் படம் பார்க்க ரசிகர்கள் வந்தனர். கர்நாடகாவில் காலை 6 மணிக்கு ஜெயிலர் படத்தின் முதல் காட்சி வெளியானது.

ஜெயிலர் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாரான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது