சினிமா செய்திகள்

இந்த 5 தென்னிந்திய படங்கள் பாலிவுட்டில் உருவானால்...

பாலிவுட்டில் உருவாக்க விரும்பும் தென்னிந்திய படங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

கடந்த காலங்களில், பல தென்னிந்திய திரைப்படங்கள் ரீமேக் செய்யப்பட்டு வசூலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. அழுத்தமான கதைகள், புதுமையான திரைப்பட உருவாக்கம் மற்றும் மறக்கமுடியாத கதாபாத்திரங்கள் ஆகியவற்றிலிருந்து தொடங்கி, தென்னிந்திய சினிமா ஒரு பொக்கிஷமாக இருந்து வருகிறது.

பல ஆண்டுகளாக, தென்னிந்தியாவில் இருந்துவரும் பல திரைப்படங்கள் இந்தியா மட்டுமில்லாமல் பிற நாட்டு பார்வையாளர்களின் கவனத்தையும் பெற்றுள்ளன. இந்நிலையில், பாலிவுட்டில் உருவாக்க விரும்பும் தென்னிந்திய படங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு இந்த 5 படங்களை பாலிவுட்டில் உருவாக்க விருப்பம் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த படங்கள் எவை எவை என்பதை இப்போது பார்க்கலாம்.

'லியோ'

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்த 'லியோ' திரைப்படம்  பல்வேறு சர்ச்சைகளை தாண்டி வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூல் செய்து சர்வதேச அளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற சாதனையை படைத்தது. மேலும்  'லியோ' திரைப்படம் உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக படக்குழு அறிவித்தது.

'ஜெயிலர்'

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இதில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்தனர். இந்த படத்தின் வசூல் ரூ.600 கோடியையும் தாண்டி சாதனை படைத்தது.

'புஷ்பா'

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் 'பான் இந்தியா' படமாக வெளியான 'புஷ்பா' வெற்றிகரமாக ஓடி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது.

'காந்தாரா'

சிறிய பட்ஜெட் படமாக வந்து அதிக வசூல் குவித்து இந்தியா முழுவதும் திரையுலகினரை திரும்பி பார்க்க வைத்த படம் காந்தாரா. இந்த படம் ரூ.16 கோடி செலவில் தயாராகி ரூ.400 கோடி வசூலித்தது. இதில் ரிஷப் ஷெட்டி கதாநாயகனாக நடித்து இயக்கி இருந்தார்.

'பிரமயுகம்'

ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்முட்டி நடித்திருந்த திரைப்படம் 'பிரமயுகம்'. இந்த படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டாலிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ராமச்சந்திர சக்கரவர்த்தி மற்றும் எஸ்.சஷிகாந்த் தயாரித்திருந்த இந்த படத்துக்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்திருந்தார். 'பிரமயுகம்' திரைப்படம் 75 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது.

ஆகிய இந்த 5 படங்களை பாலிவுட்டில் உருவாக்க விருப்பம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு