சென்னை,
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக இணையத்தில் கசிந்தநிலையில், அதற்கு படக்குழுவில் இருக்கும் எடிட்டரே கார்ணம் என தெர்வித்துள்ளார். தந்தி டி.வி.க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இயக்குனர் அமீர் இதனை தெரிவித்தார்.
அவர் பேசுகையில், ’ஒருவேளை சென்சார் போர்டில் இருந்து பகிரப்பட்டிருந்தால் CENSOR_COPY என்ற வாட்டர்மார்க் இருந்திருக்கும், ஆனால் லீக் செய்யப்பட்ட வீடியோவில் EDIT_REF என்று இருந்தது. EDIT_REF இருந்தால் அது படக்குழுவில் இருக்கும் எடிட்டரையே சேரும். அந்த எடிட்டர்தான் குற்றவாளி’ என்றார்.
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘ஜனநாயகன்’. தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் தொடர்பான சிக்கல்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக இப்படம் வெளியாகவில்லை. இதற்கிடையில், நேற்று முன்தினம் ஜன நாயகன் படத்தின் சில காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாக மர்ம நபர்களால் வெளியிடப்பட்டது. நேற்று அதிகாலை 3 மணிநேரம் கொண்ட முழு படமும் இணையத்தில் வெளியானது. இதனால் படத் தயாரிப்பு நிறுவனமும், படக்குழுவினரும், ரசிகர்களும் பேரதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.