சினிமா செய்திகள்

தாமதம் ஆகும் ‘ஜனநாயகன்’: விஜய்யின் 100 அடி கட் அவுட்டை அகற்றிய ரசிகர்கள்

படம் எப்போது வெளியாகும் என்றே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதால், விஜய் ரசிகர்கள் கட் அவுட்டை அகற்றி உள்ளனர்.

தினத்தந்தி

நெல்லை,

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகவில்லை. அதற்கு காரணம் சென்சார் பிரச்சினை. பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்த ‘ஜனநாயகன்’ படத்தை பார்த்த தணிக்கை வாரியம், சென்சார் வழங்க மறுத்து மறு ஆய்வு செய்ய பரிந்துரை அளித்தது. இதை எதிர்த்து, அப்படத்தை தயாரித்துள்ள கே.வி.என். நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தது. ஆனால் ஐகோர்ட்டில் சாதகமான உத்தரவு கிடைக்கவில்லை. சென்சார் விவகாரத்தில் மீண்டும் தனிநீதிபதியிடமே வழக்கு தொடர ஐகோர்ட் டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டு, முந்தைய தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்துள்ளது.

நீதிமன்ற இந்த தீர்ப்பின் காரணமாக ஜனநாயகன் படம் தேர்தலுக்கு முன்பாக வெளியாகுமா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால், ரசிகர்கள் சோர்வடைந்துள்ளனர். ஜனநாயகன் ரிலீஸ்க்காக பல்வேறு தியேட்டர்களிலும் பிரமாண்ட கட் அவுட்கள் கட்டப்பட்டு இருந்தன. இவற்றை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக நெல்லையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் 100 அடி உயர கட் அவுட் வைக்கப்பட்டு இருந்தது. இந்த கட் அவுட் முன்பாக தினமும் விஜய் ரசிகர்கள் செல்பி எடுத்து செல்லும் அளவிற்குஅங்கு பிரபலமானதாக இருந்தது. தற்போது படம் எப்போது வெளியாகும் என்றே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதால், கட் அவுட்டை அகற்றி பத்திரமாக வைக்க விஜய் ரசிகர்கள் முடிவு செய்து அதை அகற்றிவிட்டனர்.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு

அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி

மலையேற்றத்தின்போது இளைஞர் உயிரிழப்பு: எஜமானரின் உடலை 3 நாட்கள் பாதுகாத்த செல்லப்பிராணி நாய்