சினிமா செய்திகள்

ஜான்வி கபூரின் முதல் காதல் முறிவு அனுபவம்

ஜான்வி கபூர் முறிந்துபோன தனது முதல் காதல் அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

தினத்தந்தி

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் இந்தி படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் தேவரா என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் படத்தில் நடிக்கவும் கதை கேட்கிறார். 

ஜான்வி கபூர் அளித்துள்ள பேட்டியில், "எனது முதல் காதல் கொஞ்ச நாட்களிலேயே முறிந்து போனது. அப்போது எங்களுக்குள் முதிர்ச்சி இல்லாத வயது காரணமாக இருவருமே ஒரு வித குழப்பத்தில் இருந்தோம். காதலில் இருவருமே நேர்மையாக இல்லை.

தினம் தினம் பொய் சொல்லியே காதல் உறவை நீடித்துக்கொண்டு இருந்தோம். அந்த நேரத்தில் எனது பெற்றோர் படிப்பின் மீது கவனம் செலுத்தும்படி கடுமையாக எச்சரித்தனர். அவர்கள் சொன்னதை கேட்டால் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று புரிந்தது. அதனால் அந்த முதல் காதலை முறித்துக்கொண்டேன்'' என்றார்.

ஆனால் தான் காதலித்தவர் யார்? அப்போது என்ன வயது? போன்ற விவரங்கள் எதையும் ஜான்வி கபூர் தெரிவிக்கவில்லை.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை