சினிமா செய்திகள்

ராஷா ததானியின் அடுத்த படம்...டைட்டில் அறிவிப்பு

ராஷா ததானி, தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

பிரபல பாலிவுட் நடிகை ரவீனா தாண்டனின் மகள் ராஷா ததானி. இவர் அபிஷேக் கபூர் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி வெளியான 'ஆசாத்' படத்தின் மூலம் பாலிவுட்டில்  அறிமுகமானார்.

இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை என்றாலும், அதில் இடம் பெற்ற "உயி அம்மா" பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது. இதற்கிடையில், ராஷா ததானி, தெலுங்கில் அறிமுகமாக உள்ளார். மகேஷ் பாபுவின் சகோதரர் ரமேஷ் பாபுவின் மகன் ஜெயகிருஷ்ணா இதில் .கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இப்படத்தை அஜய் பூபதி இயக்குகிறார். சந்தமாமா கதலு பிக்சர்ஸ் சார்பில் ஜெமினி கிரண் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'ஸ்ரீனிவாசமங்காபுரம்' எனப்பெயரிடப்பட்டுள்ளது. விரைவில் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து