சினிமா செய்திகள்

ஜீவாவின் ‘வரலாறு முக்கியம்’

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரியின் இளைய மகன், ஜீவா. இவர் கதாநாயகனாக நடித்து சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த முதல் படம், ‘ஆசை ஆசையாய்.’ தொடர்ந்து ‘தித்திக்குதே’, ‘ஈ’, ‘கச்சேரி ஆரம்பம்’, ‘ரவுத்திரம்’ ஆகிய படங்களில் ஜீவா நடிக்க, சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்தது.

அவர் நடித்த காதல்-நகைச்சுவை படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளன. அந்தப் பட்டியலில், வரலாறு முக்கியம் என்ற புதிய படம் சேர்கிறது. இந்தப் படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக காஷ்மீரா பர்தேசி நடித்து இருக்கிறார். இவர், சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் நடித்தவர். ஜீவா-காஷ்மீரா பர்தேசி ஜோடியுடன் வி.டி.வி.கணேஷ், கே.எஸ்.ரவிகுமார், சித்திக், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் நடித்துள்ளனர். சந்தோஷ் ராஜன் இயக்கியிருக்கிறார்.

சென்னை, கோவை, ஐதராபாத் மற்றும் கேரளாவில் படம் வளர்ந்து இருக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் இப்போது நடைபெறுகின்றன.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்