சினிமா செய்திகள்

மதுரையில் தொடங்கும் ஜிகர்தண்டா 2 படப்பிடிப்பு - எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் நடிக்கின்றனர்

ஜிகர்தண்டா 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

மதுரை,

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் ஜிகர்தண்டா. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில், லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். அந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். பலரின் பாராட்டுக்களையும் பெற்று நல்ல வரவேற்பை பெற்ற ஜிகர்தண்டா திரைப்படத்தின் 2-ம் பாகம் குறித்த அறிவிப்பை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் ஜிகர்தண்டா 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு மதுரையில் வரும் 11-ந்தேதி தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதோடு இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது