சினிமா செய்திகள்

ஓடிடியில் வெளியாகும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்... ரசிகர்கள் எதிர்பார்ப்பு...!

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு, 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் வெற்றியை பதிவு செய்தது. இதுவரை உலகளவில் ரூ.66 கோடிக்கு மேல் இந்த படம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வருகிற 8ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்