சினிமா செய்திகள்

5-வது முறையாக இணைகிறார்கள் செல்வராகவன்-தனுஷ் கூட்டணியில், ‘நானே வருவேன்’

டைரக்டர் செல்வராகவனும், நடிகர் தனுசும் அண்ணன்-தம்பி. இருவரும் டைரக்டர் கஸ்தூரி ராஜாவின் மகன்கள்.

தினத்தந்தி

டைரக்டர் செல்வராகவனும், நடிகர் தனுசும் அண்ணன்-தம்பி. இருவரும் டைரக்டர் கஸ்தூரி ராஜாவின் மகன்கள். செல்வராகவன் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய 4 படங்களில் தனுஷ் நடித்து இருக்கிறார்.

இவர்கள் கூட்டணியில், 5-வது படமாக நானே வருவேன் அமைந்து இருக்கிறது. செல்வராகவன்-தனுஷ் கூட்டணியில் ஏற்கனவே வந்த 4 படங்களும் வெற்றி பெற்றதால் ரசிகர்கள் மத்தியில், நானே வருவேன் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.

பல வெற்றி படங்களை கொடுத்த எஸ்.தாணு, இந்த படத்தை தயாரிக்கிறார். படப் பிடிப்பு அடுத்த மாதம் (ஆகஸ்டு) தொடங்குகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்