இந்தியில் ரங்கீலா, சத்யா, ஏக் ஹசீனா தீ, பூட் உள்பட பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கு, மலையாள மொழிகளிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு ஊர்மிளா மடோன்கர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு அந்த கட்சி சார்பில் மும்பை வடக்கு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடவும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தேர்தலில் தோல்வி அடைந்தார். கட்சிக்குள்ளேயே சிலர் தனக்கு எதிராக வேலை செய்து தோற்கடித்து விட்டதாக அப்போது புகார் கூறினார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். தற்போது ஊர்மிளா சிவசேனா கட்சியில் இணைய முடிவு செய்து இருக்கிறார்.