சினிமா செய்திகள்

ராம் சரணின் 'ஆர்.சி 16' படத்தின் அடுத்த அப்டேட்

ராம் சரண் தனது 16-வது படத்தில் நடித்து வருகிறார்.

ஐதராபாத்,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் தனது 16-வது படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக ஆர்.சி 16 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார்.

ராம் சரணுடன் ஜான்விகபூர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இயக்குனர் புச்சி பாபு இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மைசூருவை தொடர்ந்து, அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் 27-ம் தேதி ஐதராபாத்தில் உள்ள பூத் பங்களாவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...