சினிமா செய்திகள்

'தோனிமா' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு

காளி வெங்கட் நடித்துள்ள ‘தோனிமா’ திரைப்படம் வரும் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

காளி வெங்கட், ரோஷினி பிரகாஷ், வைசவ் ராஜ், விவேக் பிரசன்னா, கண்ணன் பொன்னையா, பி.எல்.தேனப்பன் உட்பட பலர் நடித்துள்ள படம், 'தோனிமா'. ஜெகதீசன் சுப்பு இயக்கியுள்ளார். இவர் சிகை, பக்ரீத் படங்களை இயக்கியவர். படத்தை சாய் வெங்கடேஷ்வரன் தயாரிக்கிறார். பாக்யராஜ், சஜித் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஜான்சன் இசை அமைத்துள்ளார்.

தோனிமாவின் இயக்குனர் ஜெகதீசன் சுபு இதற்கு முன்பு சிகை மற்றும் பக்ரீத் போன்ற படங்களைத் தயாரித்துள்ளார். தோனிமா என்பது கோல்டன் ரெட்ரீவரின் நாய் என்று இயக்குனர் கூறியுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலின் பின்னணியில் இப்படம் தயாராகியுள்ளது.

வீடுகளில் வேலை பார்த்து குடும்பத்தைக் காப்பாற்றும் தனம் என்ற கதாபாத்திரத்தில் ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். கட்டிட வேலை பார்ப்பவராக வரும் காளிவெங்கட், தீவிர கிரிக்கெட் ரசிகர். தனது மகனுக்கும் கிரிக்கெட் வீரரின் பெயரை வைத்திருக்கிறார். இதில் நாய் ஒன்று முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறது.

இந்தப் படம் வரும் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்