சினிமா செய்திகள்

கடலுக்கு அடியில் காஜல் அகர்வால் தேனிலவு

நடிகை காஜல் அகர்வால் கடலுக்கு அடியில் தேனிலவை கொண்டாடினார்.

தினத்தந்தி

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வாலும், தொழில் அதிபர் கவுதம் கிட்சிலுவும் கடந்த மாதம் 30-ந் தேதி திருமணம் செய்துகொண்டனர். புதிய வீட்டிலும் குடியேறினார்கள். இருவரும் கொரோனா அச்சுறுத்தலால் தேனிலவை தள்ளிவைக்க முடிவு செய்து இருந்தனர். ஆனால் திடீரென்று மாலத்தீவுக்கு புறப்பட்டு சென்று விட்டனர். அங்குள்ள சொகுசு விடுதியில் தங்கி தேனிலவை கொண்டாடி வருகிறார்கள். கடற்கரையில் காஜல் அகர்வால், கணவருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

தற்போது கடலுக்கு அடியில் கண்ணாடி கூண்டுக்குள் இருக்கும் படுக்கை அறையில் கணவருடன் இருக்கும் புகைப்படத்தையும், மீன்களை ரசித்து பார்க்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார். தண்ணீருக்கு அடியில் இருப்பது புதுமையான அனுபவமாக உள்ளது. அறையை சுற்றி கடல் நீரையும், விதவிதமான மீன்களையும் பார்ப்பது புதிய அனுபவமாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை